ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 2&வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story