செஞ்சி நீதிபதி முன்னிலையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் ஆற்றில் கொட்டி தீ வைத்து அழிப்பு
அழிப்பு
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வளத்தி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட ஞானோதயம் சோதனைச்சாவடியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கண்டெய்னர் லாரியில் கேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரத்து 50 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜா, லாஸ்பேட்டையை சேர்ந்த சாமிதுரை, மனோ, முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் செஞ்சி சங்கராபரணி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் மற்றும் செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன் முன்னிலையில் ஆற்றில் கொட்டி தீ வைத்தது அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story