ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 முகாம்களில் 26 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 முகாம்களில் 26 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 முகாம்களில் 26 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 293 மையங்களில் நடந்தது. ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், சி.எஸ்.ஐ. ஆலயம், நீலகண்டராயப்பேட்டை, மேலப்புலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, முகாமில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கேட்டறிந்தார். உடல் பிரச்சினை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பின்னர் செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்தார். பின்னர் தடுப்பூசி கையிருப்பு, தடுப்பூசி செலுத்தியவர்களை 30 நிமிடம் கண்காணித்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுக்கிறார்களா? என கேட்டறிந்தார்.
பொதுமக்களின் தகவல் பதிவேடுகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த முகாம்களில் 26 ஆயிரத்து 590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆய்வின் போது, சுகாதாரத் துறை வருவாய்த் துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story