வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Sept 2021 11:51 PM IST (Updated: 19 Sept 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 3&வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சளிமாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

 அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 21 பேரின் குடும்பத்தினர், உறவினர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வீட்டின் அருகே நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story