மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 12:32 AM IST (Updated: 20 Sept 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தோகைமலை,
தோகைமலை அருகே மேலவெளியூர் பகுதிகளில் சிலர் மணல் கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் மேலவெளியூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் டிப்பரை சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, டிராக்டரை ஓட்டிவந்த சரவணன் (வயது 34), அவரது தம்பி ராமமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story