ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு


ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 20 Sept 2021 12:32 AM IST (Updated: 20 Sept 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் தெற்கு ரத வீதி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 67). இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  ராஜபாளையம் முடங்கிய ரோட்டில் வசித்து வருபவர் வேலு (65). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்தநிலையில் சீனிவாசன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வேலு தான் வைத்திருந்த அரிவாளால் சீனிவாசனை வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story