தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் சூலக்கரை தாதம்பட்டி ரோட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன் (வயது 52). இவரது மகன் மணிகண்டன் (25). இவரது மனைவி கார்த்திகா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வளைகாப்பு நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கார்த்திகாவின் பெற்றோர் அவர்களது சொந்த ஊரான பாலவநத்தத்திற்கு கார்த்திகாவை அழைத்து சென்றுவிட்டனர். இதனால் மணிகண்டன் மனவேதனை அடைந்து கோவையில் இருக்கும் தனது சகோதரர் நாகராஜிடம் தான் சாகப்போகிறேன் என்று டெலிபோனில் தெரிவித்துள்ளார். இதுபற்றி நாகராஜ் அவர்களது தந்தை சுப்பிரமணியத்திடம் தகவல் தெரிவிக்கவே சுப்பிரமணியன் எரிச்சநத்தத்தில் உள்ள தோட்டத்தில் இருந்து புறப்பட்டு மணிகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு பூட்டியிருந்ததால் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது மணிகண்டன் வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story