22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி


22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Sept 2021 12:38 AM IST (Updated: 20 Sept 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 22 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மெகா தடுப்பூசி முகாம் 
மாவட்டத்தில் ஏற்கனவே முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் 75ஆயிரத்து 643 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 2-வது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 311 முகாம்கள் மூலம் 22 ஆயிரத்து 734 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 இதுவரை மாவட்டத்தில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 164 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாம் முடிவடைந்த பின்பு 11 லட்சத்து 71 ஆயிரத்து 901 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-வது தடுப்பூசி முகாமை  சூலக்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
கலெக்டர் ஆய்வு 
 மேலும் அருப்புக்கோட்டை தாலுகா பாலவனத்தம் அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பு முகாமையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் தடுப்பூசி போட தகுதியானவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story