தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 12:41 AM IST (Updated: 20 Sept 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சுகன்யா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பீர் முகமது மகன் ரசூல் முத்தையா (20) என்பவர் அருணாச்சலம் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசூல் முத்தையாவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story