மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் இதுவரை-7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல் + "||" + Corona vaccine

மாவட்டத்தில் இதுவரை-7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் இதுவரை-7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.


சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

200 இடங்களில்...
கொரோனா நோய் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 12&ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மீண்டும் நேற்று 2&வது கட்டமாக தடுப்பூசி முகாம் நடந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:&
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 6 ஆயிரத்து 436 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 2&ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 44 ஆயிரத்து 611 பேர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர். விரைவில் மாவட்டத்தில் 100 சதவீதத்தை எட்ட வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளோம்.

கணினியில் பதிய ஏற்பாடு

மேலும் கடந்த முறை நடைபெற்ற முகாம்களில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கணிணியில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போது முகாம் நடைபெறும் இடத்திலேயே கணிணி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.
 நிகழ்ச்சியில் மருத்துவத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி, நகர் நல மைய டாக்டர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு
100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக இந்தியாவுக்கு, பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு - அமெரிக்க ஆய்வு முடிவு
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டும் - மத்திய இணை மந்திரி
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரைவில் 100 கோடி எண்ணிக்கையை எட்டும் என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
4. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
5. மாநிலங்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் 100 கோடிகளுக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.