டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது


டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 12:50 AM IST (Updated: 20 Sept 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருேக டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருப்புத்தூர், 

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணம்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் கார்த்தி (வயது 30). இவர் நேற்று மதுரை பகுதியில் இருந்து திருப்பத்தூர் கணேஷ் நகர் பகுதிக்கு டிப்பர் லாரியில் மணல் கொண்டு சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் போலீஸ் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் சிவாஜி பாண்டியன் மற்றும் ஏட்டு குணசேகரன் ஆகியோர் டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டு விசாரித்துள்ளனர். அதில் அரசு ஆவணம் ஏதும் இல்லாமல், மணல் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கார்த்தி மீது வழககுப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story