மீன்கள் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்


மீன்கள் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்
x
தினத்தந்தி 20 Sept 2021 1:28 AM IST (Updated: 20 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

தஞ்சாவூர்:
புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
புரட்டாசி மாதம்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதியிலும், மாநகரில் பல்வேறு இடங்களிலும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொண்டிராஜபாளையம் பகுதியில் மட்டும் 20&க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.
இங்கு வழக்கமாக ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்தநாள் என்பதால் விரதம் இருந்து வழிபடுவர். இதனால் பக்தர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவர். புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் வாங்க பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
குறைந்த அளவே வந்த மக்கள்
குறைந்த அளவிலேயே மக்கள் வந்திருந்து மீன்கள், நண்டுகளை வாங்கி சென்றனர். மக்கள் குறைவாக வந்து சென்றாலும் ஒரு சில கடல்மீன்கள் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும்போது அதிகமாகவே இருந்தது. இதற்கு காரணம் கடல்மீன்கள் குறைவாக வருவதே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். தஞ்சையில் நேற்று ஒரு கிலோ சங்கரா மீன் ரூ.300&க்கும், ஷீலா மீன் ரூ.180&க்கும், வெள்ளை கிளங்கா ரூ.200&க்கும், நெத்திலி ரூ.200&க்கும், ஐஸ் கெண்டை ரூ.120&க்கும், உயிர் கெண்டை ரூ.150&க்கும், கல்நண்டு ரூ.300&க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் கோழிஇறைச்சி, ஆட்டிறைச்சியையும் மக்கள் குறைந்தஅளவே வாங்கி சென்றனர்.

Next Story