அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
வேப்பந்தட்டையை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவனத்தம் பஸ்நிறுத்தம் அருகே அரச மரத்தடியில் அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் விநாயகர் சிலையை வைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து வருவாய் துறையினர் போலீசார் உதவியுடன், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றி அந்த பகுதியில் உள்ள மற்றொரு கோவிலில் கொண்டு போய் வைத்தனர். மேலும் விநாயகர் சிலை வைப்பதற்கு வேறு ஒரு பொதுவான இடம் ஒதுக்கி தரப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர். விநாயகர் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story