ஊராட்சி தலைவரின் மனைவியிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


ஊராட்சி தலைவரின் மனைவியிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 2:10 AM IST (Updated: 20 Sept 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது.

 காட்டுப்புத்தூர்
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக நவஜோதி உள்ளார். இவர் ஆலாம்பாளையம் புத்தூர் குடித்தெருவில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு மனைவி குணசுந்தரியுடன்(வயது 45) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது குணசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கத்தாலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story