பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில், அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
நாகர்கோவில்:
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில், அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் மையம் திறப்பு
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதை தொடர்நது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது கூறியதாவது:-
200 நோயாளிகள்
பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வழங்க முடியும்.
கொரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் ஆக்சிஜன் மையம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், இணை இயக்குனர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரகலாதன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் வேல்ராஜ், சூப்பிரண்டு ராஜைய்யன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story