தலைவாசல் அருகே கார் மோதியதில் கோவில் குதிரை சாவு


தலைவாசல் அருகே கார் மோதியதில் கோவில் குதிரை சாவு
x
தினத்தந்தி 20 Sept 2021 3:57 AM IST (Updated: 20 Sept 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே கார் மோதியதில் கோவில் குதிரை இறந்து போனது.

தலைவாசல்:
தலைவாசல் பகுதியில் தேவியாக்குறிச்சி அய்யனார் கோவில், சார்வாய் புதூர் பொன்னியம்மன் கோவில், தென்குமரை அருஞ்சோலை அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக குதிரைகளை நேர்ந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு நேர்ந்து விடப்பட்ட குதிரைகள் தலைவாசல் ஏரிபகுதியில் மேய்ச்சலுக்கு வரும். அதேபோல் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு மேய்ச்சலுக்கு கோவில் குதிரை ஒன்று வந்தது. அந்த குதிரை, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணிவிழுந்தான் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக குதிரை மீது மோதியது. இதில் அந்த குதிரை பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அதே நேரில் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story