பானிபூரியில் புழுக்கள் இருந்ததால் வடமாநில வியாபாரியை கட்டி வைத்து அடி-உதை


பானிபூரியில் புழுக்கள் இருந்ததால் வடமாநில வியாபாரியை கட்டி வைத்து அடி-உதை
x
தினத்தந்தி 20 Sept 2021 2:45 PM IST (Updated: 20 Sept 2021 2:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பட்டரவாக்கம் ரெயில் நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.

ஆனால் பானிபூரியில் துர்நாற்றம் வீசியதால் பானிபூரி மற்றும் உருளைக்கிழங்கு இருந்த பாத்திரத்தை வாடிக்கையாளர்கள் திறந்து பார்த்தனர். அதில் உருளைக்கிழங்கில் ஏராளமான புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த பானிபூரி வியாபாரியை அங்கிருந்த ஒரு கம்பியில் கைகளை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார் வாலிபரை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Next Story