உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 20 Sept 2021 7:32 PM IST (Updated: 20 Sept 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி காங்கேயத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம்,
விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி காங்கேயத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்முனை மின்சாரம்
காங்கேயம் அருகே பழையகோட்டை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை ஆகிய பகுதியில்  40 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் விவசாயம் சார்ந்த தொழில்களான தென்னை நார் உற்பத்தி, கயிறு உற்பத்தி, விசைத்தறி உள்ளிட்ட தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாததோடு, தொழிற்கூடங்களும் முடங்கிய நிலையில் உள்ளன. எனவே இப்பகுதிக்கு முந்தைய அரசு அறிவித்தது போல 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் காங்கேயம் பஸ் நிலையம் அருகே உள்ள மின் வாரியத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நத்தக்காடையூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் வெ.கணேஷ் உறுதியளித்ததைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Next Story