தூத்துக்குடியில் கந்து வட்டி வசூலித்த முதியவர் கைது


தூத்துக்குடியில்  கந்து வட்டி வசூலித்த முதியவர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 7:34 PM IST (Updated: 20 Sept 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கந்து வட்டி வசூலித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஆவுடையாச்சி (வயது 42). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தொழில் நடத்துவதற்காக அதே பகுதியை சேர்ந்த தெரசையா (62) என்பவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதன் பிறகு ரூ.1 லட்சமும் கடனாக வாங்கி உள்ளார். தொடர்ந்து 16 ½ பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் வரை கடன் வாங்கி உள்ளார். இந்த கடன்களுக்கு ஆவுடையாச்சி கடந்த 2 வருடங்களாக வட்டி எதுவும் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தெரசையா நகைகள் போக, மேலும் ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டினாராம். இதுகுறித்து ஆவுடையாச்சி அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி வசூலித்ததாக, தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெரசையாவை கைது செய்தனர்.


Next Story