காசோலை மயிலாத்தாளின் மகள் செல்லம்மாளிடம் வழங்கப்பட்டது


காசோலை மயிலாத்தாளின் மகள் செல்லம்மாளிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 20 Sept 2021 7:36 PM IST (Updated: 20 Sept 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

காசோலை மயிலாத்தாளின் மகள் செல்லம்மாளிடம் வழங்கப்பட்டது.

உடுமலை
உடுமலை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த மயிலாத்தாள் என்பவர் பணித்தளத்தில் பணியின்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இதற்கு, இந்த திட்டத்தில் பணியின்போது இறந்தால் அவரது குடும்ப வாரிசுதாரருக்கு வழங்கக்கூடிய நிதி ரூ.25ஆயிரத்துக்கான காசோலை மயிலாத்தாளின் மகள் செல்லம்மாளிடம் வழங்கப்பட்டது.
உடுமல ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.மணிகண்டன் வட்டார வளர்ச்சி அலுவலர்கிராம ஊராட்சிகள் எம்.ரொனால்டு செல்டன் பெர்ணான்டஸ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் ராஜேந்திரன் போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் டி.சவுந்தரராஜன் ஊராட்சி செயலாளர் எல்.விஜயகுமார் பணிமேற்பார்வையாளர் ஜெயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story