மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்
மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி
மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கோத்தகிரியில் பல்வேறு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
நீர்வளம், நில வளம் மற்றும் தேயிலை விவசாயத்தை பாதிக்கக்கூடிய வகையில் தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள கற்பூரம், சீகை மற்றும் சில்வர் ஓக் ஆகிய மரங்களை வெட்ட தடை விதித்துள்ள மாவட்ட வன அலுவலரை கண்டித்தும், மரங்களை வெட்ட விதித்த தடையை நீக்கக் கோரியும்
மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு), மர வியாபாரிகள் சங்கம், சாமில் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், லாரி ஓட்டுநர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பழங்குடியின மக்கள் பேரவை ஆகியவை சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கோத்தகிரி மரவியாபாரிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மானியம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது
நீலகிரி மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு சில்வர் ஓக் மரத்தை விவசாய பயிராக அறிவித்து மரம் வெட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நீலகிரி மாவட்ட வனத்துறை தற்போது மரம் வெட்டுவதற்கும், விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது.
தங்கள் நிலத்தில் விளையும் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் சில்வர் ஓக் மரங்கள், சீகை கற்பூரம், பைன் போன்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வழிகாட்டுதல் உள்ளது.
எனவே நீர்வளத்தையும் நிலத்தின் தன்மையும் மாற்றக்கூடிய சீகை, கற்பூரம், பைன் உள்ளிட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும்,
நீர் வளங்களை பாதுகாக்கவும், மனித வனவிலங்கு மோதல்களை தடுத்து நிறுத்தவும், விவசாயிகளின் தோட்டங்களில் சோலை மர நாற்றுகளை நடவு செய்ய மானியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையை நீக்க வேண்டும்
மேலும் பிற மாநிலங்களில் உள்ளது போல விவசாய பயிரான சில்வர் ஓக் மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல பிறப்பிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
தற்போது அரசு ஆணைக்கு எதிராக வனத்துறை அனுமதி பெற்றுத் தான் சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட வன அலுவலர் பிறப்பித்துள்ள வாய்மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்ட வன அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story