பழனி முருகன் கோவிலில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
பழனி முருகன் கோவிலில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் 150&க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முருகன் கோவிலில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் நேற்று பழனி கோவில் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் 300&க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணி செய்து வந்த நிலையில், தற்போது 170 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இவர்களுக்கும் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதால் குறைவான சம்பளம், வேலைப்பளு அதிகமாக உள்ளது. எனவே முறையான வேலை, ஊதியம் வழங்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை கோவில் உதவி ஆணையர் செந்தில்குமாரிடம் அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story