விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டர் சாவு


விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டர் சாவு
x
தினத்தந்தி 20 Sept 2021 11:04 PM IST (Updated: 20 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார்.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி அபிஷேக கட்டளை தெரு பகுதியை சேர்ந்தவர் எழிலன் (வயது41). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய அவர் கடந்த 12&ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் 15-ந் தேதி எழிலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில்   திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story