உளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டையில் சி டி ஸ்கேன் மையத்தில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் பிரபல மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் சி.டி.ஸ்கேன் மையம் இயங்கிவருகிறது. நேற்று மாலை இங்கு மின்சாதன பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென கரும் புகை கிளம்பியது. அடுத்த சில நிமிடங்களில் அறையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இதுகுறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story