ஏலகிரி மலை ரோட்டில் பாறைகள் உருண்டு விழுந்தது
ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சரிந்து விழுந்தது. அதை வெடிவைத்து அகற்றினர்.
தொஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சரிந்து விழுந்தது. அதை வெடிவைத்து அகற்றினர்.
பாறை உருண்டு விழுந்தது
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலம் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவு கொண்ட சாலைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் ஏலகிரிமலை 10&வது கொண்டை ஊசி வளைவில் நேற்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பெரிய அளவிலான ராட்சத பாறை சாலையோரத்தில் மரங்களுடன் சரிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலை ஓரத்தில் விழுந்து கிடந்ததால் ஒவ்வொரு வாகனங்களாக கடந்து சென்றது. இதனால் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வெடி வைத்து அகற்றம்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் மணி சுந்தரம், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சாலை ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாலைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிப்புக்குள்ளான இடங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெரிய அளவிலான ராட்சத பாறையை அகற்ற முடியாமல் பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் வெடி வைத்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றி சாலையை சீரமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story