ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்

ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2021 6:34 PM GMT (Updated: 20 Sep 2021 6:34 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.

ராமநாதபுரம்,செப்.21-

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.

352 முகாம்கள்

கொரோனா 2-வது அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 352 இடங்களில் நடைபெற்றது.
ராமநாதபுரம் சுகாதார வட்டத்தில் 6 ஆயிரத்து 55 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 3 ஆயிரத்து 201 பேருக்கு 2&வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது. பரமக்குடி சுகாதார வட்டத்தில் 7 ஆயிரத்து 593 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 4 ஆயிரத்து 394 பேருக்கு 2&வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஏற்கனவே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 60 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதை தொடர்ந்து 352 இடங்களில் நடைபெற்ற 2&வது மெகா தடுப்பூசி முகாமில் 21 ஆயிரத்து 243 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Next Story