கலப்பட டீசல் விற்ற வாலிபர் கைது


கலப்பட டீசல் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 12:35 AM IST (Updated: 21 Sept 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

கலப்பட டீசல் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் மாவட்டம் காசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு புளூ மெட்டல் நிறுவனத்தில் கலப்பட டீசல் விற்கப்படுவதாக கரூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்&இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள குவாரியில் நின்றிருந்த டேங்கர் லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், விற்பனைக்காக கலப்பட டீசல் சுமார் 1,000 லிட்டர் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலப்பட டீசல் விற்றதாக மன்னார்குடியை சேர்ந்த ஆகாஷ் (வயது 22) என்பவரை கைது செய்து, டேங்கர் லாரி மற்றும் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.

Next Story