கஞ்சா விற்ற 6 பேர் கைது
சிவகாசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி டவுன் சப்&இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு முனியாண்டி (வயது 38), முத்துப்பாண்டி (33) ஆகியோர் 450 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டவுன் சப்&இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் காமராஜர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சித்திக் (32) என்பவர் 310 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். திருத்தங்கல் போலீசார் அதிவீரன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 150கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற ரூ.15,300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு சப்&இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் நாரணாபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த முனீஸ்வரன் காலனியை சேர்ந்த காமாட்சி (27) என்பவரை போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சப்&இன்ஸ்பெக்டர் ராமநாதன் 56 வீட்டுகாலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சாவுடன் நின்றுக்கொண்டிருந்த உசேன்காலனியை சேர்ந்த லட்சுமணனன் (28) என்பவரை போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story