வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2021 12:56 AM IST (Updated: 21 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை,


மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை, திருப்புவனம்
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதை கண்டித்தும் நீட் தேர்வை கண்டித்தும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.சிவகங்கை வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் வீட்டின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டாங்கி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சிவகங்கை நகர கழக செயலாளர் துரை ஆனந்த் வீட்டின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் துரை ஆனந்த், அயூப்கான், வக்கீல் அமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி, திருப்பத்தூர்
இளையான்குடியில் தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் சுப.மதியரசன் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் சூராணத்திலும், மேற்கு ஒன்றிய கழகத்தில் எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையிலும் ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலையில் முனைவென்றி கிராமத்திலும், சாலைக்கிராமத்தில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆறு.செல்வராஜன் தலைமையிலும் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நெடுமரத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஆர்.சி. இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோன்று கல்லல் ஒன்றியம் குன்றக்குடியில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், திருப்பத்தூர் நான்கு ரோட்டில் தி.மு.க நகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலும், கீழச்சிவல்பட்டியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எஸ்.எம். பழனியப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம், செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரையில் மத்திய அரசை கண்டித்து யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை தலைமையில் அவரது வீட்டின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி அண்ணா மன்றம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர் வக்கீ கணேசன், ஒன்றிய துணை தலைவர் சிவபுரி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பிரான்மலை ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரான்மலை பகுதி மெடிக்கல் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் மற்றும் பலர் பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். 
காரைக்குடி
காரைக்குடி வாட்டர்டேங்க் பகுதியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவினர் கலந்துகொண்டனர். இதேபோல் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூர் தி.மு.க சார்பில் மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய பொறுப்புக்குழு தலைவர் டாக்டர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் காரைக்குடி அருகே உள்ள வ.சூரக்குடி மற்றும் திருவேலங்குடி ஆகிய இடங்களில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளரும், வ.சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர்கள் உள்பட தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். கோவிலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணிகிட்டு உள்பட கூட்டணி கட்சியினர், தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
.........................................


Next Story