சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை புரிந்து மொட்டை அடித்தும், தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு வழிபாடு
பவுர்ணமியையொட்டி நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், தேன் உள்பட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் மகாராஜபுரம் விளக்கு, தாணிப்பாறை விளக்கு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story