கிணற்றில் முதியவர் பிணம்


கிணற்றில் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 21 Sept 2021 1:00 AM IST (Updated: 21 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 80). சலவை தொழிலாளியான இவர் வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாடசாமியை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாடசாமி பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது மகன் பாண்டி சம்பவ இடத்துக்கு சென்றார். பின்னர் மாடசாமி தான் என உறுதி செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி எப்படி இறந்தார்?  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story