தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் புகார் பெட்டியில் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் புகார் பெட்டியில் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை கீழ-வா-சல் டபீர்-கு-ளம் சாலை-யில் 12, 13&வது வார்-டு-களுக்கு-ரிய ரேஷன் கடை-கள் உள்-ளன. இந்த கடை-களுக்கு எதி-ரில் குப்-பை-கள் கொட்-டப்-பட்டு வரு-கி-றது. இந்த குப்-பை-கள் அகற்-றப்-ப-டா-மல் அங்-கேயே குவிந்து கிடக்கி-றது. இத-னால் துர்-நாற்-றம் வீசு-வ-தால் ரேஷன் கடைக்கு வரு-ப-வர்கள்
அவ-தி-ய-டைந்து வரு-கின்-ற-னர். மேலும் சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்டு தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குவிந்து கிடக்கும் குப்-பை-களை அகற்றி தொற்-று-நோய் பர-வு-வதை தடுக்க நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
-&பொது-மக்கள், தஞ்சை கீழ-வா-சல்.
பட்டுபோன மரம்
தஞ்-சா-வூர் மாவட்-டம் பூத-லூர் தாலுகா ஊராட்-சி-யில் சாலை ஓரத்-தில் பட்-டு-போன மரம் உள்-ளது. அதன் அரு-கில் பஸ் நிறுத்-தம் உள்-ளது. பட்-டு-போன மரம் விழுந்-தால் ஆபத்து ஏற்-ப-டுமோ? என பஸ் நிறுத்-தம் அருகே செல்-வ-தற்கு மாணவ&மாண-வி-கள் மற்-றும் பொது-மக்கள் அச்-சப்-ப-டு-கின்-ற-னர். எனவே அதி-கா-ரி-கள் விபத்து ஏற்-ப-டும் முன்பு பட்-டு-போன மரத்தை வெட்ட நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என்று அப்-ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்-ள-னர்.
&பொது-மக்கள், பூத-லூர்.
கழிவு நீர் அகற்றப்படுமா?
கும்-ப-கோ-ணம் வடம்-போக்கி தெரு குட்-டி-யான் பாளை-யம் சந்-தில் சாக்கடை கழிவு நீர் வெளி-யே-று-கி-றது. இந்த கழி-வு-நீ-ரால்
கொசு உற்-பத்-தி-யாகி சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்-டுள்-ளது. இத-னால் அந்த வழி-யாக செல்-லும் பள்ளி மாணவ&மாண-வி-கள் பாதிக்கப்-பட்-டுள்-ள-னர். மேலும் அப்-ப-கு-தி-யில் குடி-யி-ருக்கும் பொது-மக்கள் அவ-தி-ய-டைந்து வரு-கின்-ற-னர். இந்த கழி-வு-நீ-ரால் தொற்-று-நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள்
கழி-வு-நீரை அகற்ற வேண்-டும் என்-பதே அப்-ப-குதி மக்க-ளின்
எதிர்-பார்ப்-பா-கும்.
&பொது-மக்கள், கும்-ப-கோ-ணம்.
குண்டும், குழியுமான சாலை
தஞ்-சை-யில் பிர-தான வீதி-க-ளான கீழ-வீதி, மேல-வீதி, வடக்கு வீதி மற்-றும் தெற்-கு-வீதி ஆகிய அனைத்து வீதி-களும் சாலை பரா-ம-ரிப்-பின்றி குண்-டும், குழி-யு-மாக காட்சி அளிக்கி-றது. இத-னால் அந்த வழி-யாக செல்-லும் வாகன ஓட்-டி-கள், பொது-மக்கள் அடிக்கடி விபத்-தில் சிக்கி வரு-கின்-ற-னர். இந்த சாலை போக்கு-வ-ரத்து செல்ல முடி-யாத நிலை-யில் உள்-ளது. மேலும் அய்-யங்க-டை-வீதி, வடக்கு வாசல் போன்ற சாலை-களும் குண்-டும், குழி-யு-மாக உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குண்-டும், குழி-யு-மான சாலை-களை சீர-மைக்க வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்க-ளின் கோரிக்-கை-யா-கும்.
-&பா.காம-ராஜ், தஞ்-சா-வூர்.
வழிகாட்டி பலகை மாற்றப்படுமா?
தஞ்சை தொல்-காப்-பி-யர் சதுக்கத்-தில் மாந-க-ராட்சி சார்-பாக வழி-காட்டி பலகை வைக்கப்-பட்-டுள்-ளது. இந்த பலகை அந்த வழி-யாக செல்-லும் வாக-னத்-தின் மீது விழும் நிலை-யில் உள்-ளது. பலகை விழுந்-தால் வாகன ஓட்-டி-களுக்கு விபத்து ஏற்-ப-டும். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் விழும் நிலை-யில் உள்ள வழி-காட்டி பல-கையை அகற்-றி-விட்டு புதி-தாக மாற்றி தர வேண்-டும் என்று அப்-ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்-ள-னர்.
-&பொது-மக்கள், தஞ்-சா-வூர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பி
தஞ்-சா-வூர் மாவட்-டம் பட்-டுக்-கோட்டை 30&வது வார்டு ஸ்ரீகண-பதி நக-ரில் தாழ்-வாக மின்-கம்பி செல்-கி-றது. இந்த மின்-கம்பி எந்-த-நே-ரத்-தி-லும் அறுந்து விழும் நிலை-யில் உள்-ளது. இத-னால் அந்த வழி-யாக செல்-லும் பொது-மக்கள், வாகன ஓட்-டி-கள் உயிர்-பலி ஏற்-ப-டுமோ? என்ற அச்-சத்-து-டன் உள்-ள-னர். மேலும் மின்-கம்பி தாழ்-வாக செல்-வ-தால் வீட்-டின் மாடி-யில் விளை-யா-டும் குழந்-தை-களுக்கு விபத்து ஏற்-ப-டும் வாய்ப்பு உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் உயிர்-பலி ஏற்-ப-டும் முன்பு தாழ்-வாக செல்-லும் மின்-கம்-பி-களை சரி செய்ய நட-வ-டிக்கை எடுக்க
வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
&பொது-மக்கள், பட்-டுக்-கோட்டை.
Related Tags :
Next Story