ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா
ஆதனக்கோட்டை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் முள்ளூர் என்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 9 இளம் வயதினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களில் 19 வயது முதல் 22 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆவர். மேலும், ஏ.மாத்தூரைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. தொற்று பாதிப்பு இதற்கு முன்பு தினமும் சராசரியாக 20 எண்ணிக்குள் இருந்து வந்தது. தற்போது சற்று அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story