தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 Sept 2021 1:56 AM IST (Updated: 21 Sept 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூர்வாரப்படாத தெப்பக்குளம் 
திருச்சி மாவட்டம் , லால்குடி தாலுகா, தெரணிப்பாளையம் தெப்பக்குளம் பராமரிப்பு இன்றி தூர்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் அந்த குளத்தில் மழைநீர் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும்போது மழைநீர் தேங்கி நின்றால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குளத்தை தூர்வாரி மழைநீர் தேங்கி நிற்கும் வகையில் வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாண்டிதுரை, தெரணிப்பாளையம், திருச்சி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருப்பூர் கிராமம் வில்லுக்காரன்பட்டி அருகே உள்ள கொல்லன் குளத்திற்கு காயாமலையில் இருந்து வரத்து வாரி செல்கிறது. இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழை காலங்களில் இந்த குளத்திற்கு தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 
குணசேகரன், வில்லுக்காரன்பட்டி, திருச்சி.

குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் புலியூர், கண்ணங்குடி, காயாம்பட்டி, வெண்ணமுத்துப்பட்டியை திருச்சி மாவட்டத்தின் தேனீர் பட்டி, அசூர், துவாக்குடியோடு இணைக்கும் சாலை தரமற்று பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரபு, கீரனூர், புதுக்கோட்டை,

அரசு பஸ் இயக்க வேண்டும் 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அத்தியூர் பகுதியில் சரிவர அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அத்தியூர் பகுதி மக்கள் வெளியூர் செல்லவும், மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லவும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஓம்சிவா, அத்தியூர், பெரம்பலூர்.

நாய் தொல்லையால் வாகன ஓட்டிகள் அச்சம் 
திருச்சி மாவட்டம் உறையூர் பாத்திமா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.  நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் நின்று சண்டையிட்டுக்கொள்வதால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரெங்கநாதன், உறையூர், திருச்சி. 

ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி 
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் செல்லும் சந்திப்பு பகுதியில் பழைய தரை  பாலத்தை அகற்றி விட்டு புதிதாக பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிஆமை வேகத்தில் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். 
ஊர் பொதுமக்கள், மு.புத்தூர், அரியலூர். 

சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூரில் இருந்து நச்சலூர் செல்லும் சாலையில் ஏளராளமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குறுகளாக உள்ளதால் அதனை விரிவாக்கம் செய்து சாலையில் ஏற்பட்டுள்ள பழுதடை சரிசெய்ய வேண்டும். 
முகமதுபார்க், இனுங்கூர், கரூர்.

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம் ஜே.கே.நகர் 30வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதேபோல் காட்டூர் பர்மாகாலனியில் சாலையோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி. 

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
திருச்சி மாவட்டம், மணப்பாறை வண்டிப்பேட்டை தெரு 20-வது வார்டு பகுதியில் கடந்த பல மாதங்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முத்துக்குமார், மணப்பாறை, திருச்சி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குடமுருட்டி முதல் அந்தநல்லூர் வரையிலான சாலை விரிவாக்கத்தின் போது  ஜீயபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது பஸ் நிலையம் அருகில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், குடமுருட்டி, திருச்சி. 

பயன்பாட்டிற்கு வராத  சுகாதார கழிப்பிடம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பஞ்சாயத்து மேலசீதேவிமங்கலம் கிராமத்தில் புதிய சுகாதார கழிப்பிடம் கட்டி  பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட சுகாதார கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
ஞானசேகரன், மண்ணச்சநல்லூர், திருச்சி. 

பன்றிகளால் நோய் தொற்று அபாயம் 
திருச்சி கொட்டபட்டு வெங்கடேஷ்வரா நகர் மற்றும் இந்திரா நகர் பகுதியில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் சுற்றித்திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம்  உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், வெங்கடேஷ்வரா நகர், திருச்சி. 

பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி 
திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு செல்லும் சறுக்குப்பாறை சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகேஷ்குமார், மலைக்கேட்டை, திருச்சி. 

Next Story