தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தடுப்பு சுவர் கட்ட வேண்டும்
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் சாலையோரம் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் தடுப்பு சுவர் எதுவும் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி வாகனங்கள் குளத்திற்குள் பாய்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி சாலையோரம் தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சாலையில் தேங்கும் மழைநீர்
தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வைராவிளையில் இருந்து பரப்புவிளை செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த், வைராவிளை.
சாலை சீரமைக்கப்படுமா?
இடைக்கோடு கொடுக்கவிளை சந்திப்பில் இருந்து அண்டுகோடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-சிவா, மேல்பாலை.
ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்
மேலசங்கரன்குழி பஞ்சாயத்துக்குட்பட்ட பேயோடு சந்திப்பில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள இரண்டு கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரசுமணி, சேனாப்பள்ளி.
ஓடையில் தேங்கும் கழிவுநீர்
மேலமறவன்குடியிருப்பு 39-வது வார்டில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை நீர் வீடுகளின் முன்பு ஓடையில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய சம்பந்்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், வண்ணான்விளை.
தாழ்வாக இருக்கும் தெருவிளக்கு சுவிட்ச்
நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டு சபையார் குளம் பகுதியில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. அதன் எதிரே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு சுவிட்ச் பாக்ஸ் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த சுவிட்ச் பாக்ஸ் பல நேரங்களில் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்கம்பத்தில் உள்ள சுவிட்ச் பாக்சை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
-ராஜன், நாகர்கோவில்.
நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வேண்டும்
இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட இளஞ்சிறை கிராமத்திற்கு மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 84 மணிவிளை பஸ் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 85 பி பனச்சமூடு பஸ் காலை நேரத்தில் மட்டும் வந்து செல்கிறது. இதனால், மாலையில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பினோ, இளஞ்சிறை.
உடைந்த மின்கம்பம்
தேரூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. காற்று, மழை காலங்களில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பேராபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பத்மநாபன், தேரூர்.
Related Tags :
Next Story