காவலாளி தற்கொலை
பழவூர் அருகே கடன் தொல்லையால் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் குமரேசன் (வயது 45). இவர் பக்கத்து ஊரான பிள்ளையார்குடியிருப்பில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற குமரேசன், காற்றாலை நிறுவனத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பழவூர் போலீசார் விரைந்து சென்று, குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story