தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பழுதான தண்ணீர் தொட்டி
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா செம்மண்கூடல் ஊராட்சி குயவனூரில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. அதன் அருகில் மோட்டாரும் பழுதாகி காணப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஆர்.செல்லப்பன், குயவனூர், ஓமலூர்.
===
சாலையில் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாநகராட்சி 22&வது வார்டு கந்தம்பட்டி அருகில் பனங்காடு பகுதியில் உள்ள சாலையில் எப்போதும் சாக்கடை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த தாழ்வான பகுதியில் சாலையில் மழைநீரும், கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி நின்று மாணவ&மாணவிகள் முதல் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த தார் சாலையில் தண்ணீர் தேங்குவதால் சாலை பழுதடைந்து விடுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
====
பஸ் சேவை மீண்டும் இயக்கப்படுமா?
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அனுப்பூருக்கு அரசு டவுன் பஸ் (வழித்தடம் எண்&48) இயக்கப்பட்டு வந்தது. மின்னாம்பள்ளி வழியாக இயக்கப்பட்டு வந்த பஸ், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்குவதற்கு சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமி, சங்கர்நகர், சேலம்.
====
மோசமான தரைப்பாலம்
சேலம் 3 ரோடு ஜவஹர்மில் பின்புறம் உள்ளது கோடிப்பள்ளம். இந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதனை சீரமைக்க அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மோசமான தரைப்பாலத்தை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
மணிகண்டன், கோடிப்பள்ளம், சேலம்.
=======
கல்லூரி முன்பு வேகத்தடை
தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ& மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி முன்பு வேகத்தடை இல்லை. இதனால் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அதி வேகமாக செல்கின்றன. இதன் காரணமாக மாணவ&மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே கல்லூரி முன்பு உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
அர்ஜுன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
=============
பன்றிகள் தொல்லை
சேலம் தெற்கு எஸ்.பாப்பாரப்பட்டியில் உள்ளது கை.புதூர். இந்த பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் பன்றிகள் தொல்லை அதிகம் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது பன்றிகள் அடிக்கடி குறுக்கே ஓடுவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேஷ், கை.புதூர், சேலம்.
========
குழியால் விபத்து அபாயம்
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் சாலையில் இருந்து குட்டை தெரு வழியாக சேலம் சாலைக்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சரியாக குட்டை தெரு சேந்தமங்கலம் சாலையுடன் சந்திக்கும் பகுதியில் குழி ஒன்று ஏற்பட்டு உள்ளது.
இந்த குழியில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறும் முன்பு இந்த குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்செல்வன், நாமக்கல்.
============
தெருநாய் தொல்லை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. சுமார் 15 நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொண்டே சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவை கடித்து விடுமோ என்ற அச்சத்தில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோரும் பயத்துடன் செல்கின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்தாஜ்பேகம், ராசிபுரம்.
=======
பிளாட்பாரத்தை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பகுதியில் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக புதிய பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு டவுன் பஸ்கள் வந்து செல்ல தனியாக பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரத்தை ஆக்கிரமித்தபடி இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் பஸ் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேஷ், தர்மபுரி.
======
சுகாதார சீர்கேடு
தர்மபுரி& பென்னாகரம் சாலையில் குமாரசாமி பேட்டை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையின் இரு பகுதிகளிலும் கடைகள் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த சாலையை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் கழிவுப் பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பகுதியை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேலவன், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
====
Related Tags :
Next Story