மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 2 பேர் பலி + "||" + 2 killed for corona

கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலி
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்:

2 பேர் சாவு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 10 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 76 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 133 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தட்டுப்பாடு
பெரம்பலூர் மாவட்டத்தில் 724 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 857 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.