மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2021 4:25 AM IST (Updated: 21 Sept 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:
புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் போன்றவற்றில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தென்காசி மேலமாசிவீதி, கொடிமரம், மவுண்ட் ரோடு, கூலக்கடை பஜார், ஹவுசிங் போர்டு, கீழப்புலியூர், வாய்க்கால் பாலம், மலையான் தெரு, காட்டுபாவா பள்ளி அருகில் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தி.மு.க. செயலாளர் சாதிர் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கோமதி நாயகம், கம்யூனிஸ்டு கட்சி அயூப்கான், கணேசன், த.மு.மு.க. சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம-புலியருவி ரோட்டில் குற்றாலம் தி.மு.க. செயலாளர் மந்திரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாரியப்பன் என்ற கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இலஞ்சி ஜூபிலி 3&வது தெருவில் இலஞ்சி தி.மு.க செயலாளர் முத்தையா பாண்டியன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

சுரண்டையில் அண்ணா சிலை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து 234 மீட்டர் நீள கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் முன்னிலை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையநல்லூர் நகர செயலாளர் சேகனா, காங்கிரஸ் சமுத்திரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்யது மசூது, மதிமுக முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியநாதன், தமிழ் புலி சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு குத்தாலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி பாதுசா மற்றும் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஷேக் தாவூத், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் செரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புளியங்குடியில் தி.மு.க. நகர செயலாளர் ராஜ்காந்த் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், தி.மு.க மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் பத்திரம் சாகுல்ஹமீது, ம.தி.மு.க. நகர செயலாளர் ஜாகீர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story