பாண்டமங்கலம் அருகே பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது


பாண்டமங்கலம் அருகே பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 1:04 PM IST (Updated: 21 Sept 2021 1:04 PM IST)
t-max-icont-min-icon

பாண்டமங்கலம் அருகே பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது

பரமத்திவேலூர்:
பாண்டமங்கலம் அருகே நெட்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் நெட்டையம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்குள் இருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அதில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கபிலர்மலை அருகே சிறுகிணத்துபாளையத்தை சேர்ந்த ராமசாமி (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் பாண்டமங்கலத்தை சேர்ந்த முரளி (53) என்பவரையும் கைது செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்களை அவரவர் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
======

Next Story