கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.19 லட்சம் களவு போன செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள களவு போன செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள களவு போன செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி வழங்கினார்.
ரூ.19.75 லட்சம் செல்போன்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாவ மாவட்ட போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் உட்கோட்டம் வாரியாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் தொலைந்து போன செல்போன்களை மீட்க நடவடிக்கைகள மேற்கொண்டனர். அந்த வகையில் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 109 செல்போன்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகார் அளிக்கலாம்
இந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி ஒப்படைத்தார். செல்போன்கள் தொலைந்தாலோ, பறித்து சென்றாலோ, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி கேட்டுக் கொண்டார்.
Related Tags :
Next Story