குடிநீர் கட்டணத்தையும், வரியையும் 30ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்களிடம் வருகிற 3092021க்கு முன்னதாக வரியையும், கட்டணங்களையும் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறது.
நுகர்வோர்கள் வரியையும், கட்டணங்களையும், சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும், பகுதி அலுவலகங்களிலும் அல்லது பணிமனை வசூல் மையங்களிலும் மற்றும் அரசு இசேவை மையம் அல்லது இணையதளத்தின் வாயிலாக வாரியத்தின் வலைதள முகவரி https://chennaimetrowater.tn.gov.in/ உபயோகப்படுத்தியும் செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story