மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்; தியாகராயா கல்லூரி, கிண்டியில் நாளை நடக்கிறது
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விம்கோ நகர், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நேற்று நடந்த மருத்துவ முகாமில் 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
நாளை (புதன்கிழமை) தியாகராயா கல்லூரி மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஐகோர்ட்டு மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், 27-ந் தேதி (திங்கட்கிழமை) புதுவண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி மெட்ரொ ரெயில் நிலையங்களிலும், 29-ந் தேதி (புதன்கிழமை) அரசினர் தோட்டம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் நடக்கிறது. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் நடக்கிறது. இந்த முகாமில் உயரம் மற்றும் எடை, ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சர்க்கரை, வெப்பநிலை, துடிப்பு போன்றவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story