மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகாத ஏக்கத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Female officer commits suicide by hanging out of marrage nostalgia

திருமணம் ஆகாத ஏக்கத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத ஏக்கத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை திருவொற்றியூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய 2-வது மகள் மானசா (வயது 25). எம்.எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா படித்துள்ள மானசா, தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் மானசாவுக்கு சரியான மாப்பிள்ளை அமையவில்லை என தெரிகிறது. இதனால் திருமண ஆகாத ஏக்கத்தில் இருந்த மானசா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.