கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை


கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2021 4:35 PM IST (Updated: 21 Sept 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மொரட்டுபாளையம் ஊராட்சி பஸ் நிறுத்த பகுதியிலிருந்து வாவிபாளையம் வழியாக திருப்பூர் பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் அமைந்துள்ள கிணற்றில் தடுப்பு சுவர் ஒரு அடிக்கு குறைவாக உள்ளது. சாலையின் வளைவு பகுதியில் தார் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த  வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது மொரட்டுபாளையம் பஸ் நிறுத்தம் சாலையோரம் கிணறு உள்ளது. இந்த சாலை  போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் எதிரில் வாகனம் வரும்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. மேலும் அருகாமையில் கோவில் மற்றும் வீடுகள் அமைந்திருப்பதால் இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றின் தடுப்பு சுவர் உயரத்தை அதிகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story