சூசையாபுரம் பகுதியில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


சூசையாபுரம் பகுதியில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 21 Sept 2021 5:13 PM IST (Updated: 21 Sept 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

சூசையாபுரம் பகுதியில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், 
சூசையாபுரம் பகுதியில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
திருப்பூர் சூசையாபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு அந்த பகுதியில் சில இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் விறு, விறுவென நிரம்பி வழிகின்றன. 
இந்த குப்பை தொட்டிகள் உடனே நிரம்புவதால், குப்பைகளை கொட்டுவதற்காக கொண்டு செல்கிறவர்கள், அந்த குப்பை தொட்டியின் அருகே ஆங்காங்கே கொட்டி செல்கிறார்கள். இந்த குப்பை தற்போது ரோட்டோரம் குவிந்து கிடக்கிறது. காற்றில் குப்பைகள் அங்கும், இங்குமாக பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். 
கூடுதலாக
இதுபோல் இறைச்சி கழிவுகளை நாய்கள் அங்கும், இங்குமாக இழுத்து செல்கின்றன. மேலும், சூசையாபுரம் மேட்டுப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளும் நிரம்பிய நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சூசையாபுரம் பகுதிகளில் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.
தற்போது குவிந்து கிடக்கிற குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிற நிலை உருவாகியுள்ளது. எனவே இதனையும் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சூசையாபுரம் பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்களின் தேவைக்கு ஏற்ப குறுகிய இடைவெளியில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க 


Next Story