திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக செயற்குழு கூட்டம் நடந்தது. பயின்றோர் கழக தலைவரும், கல்லூரி முதல்வருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பயின்றோர் கழக துணை தலைவர் ஜெயபோஸ், செயலர் பிரபாகரன், இணை செயலர் கதிரேசன், பொருளாளர் பகவதி பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயசிங் சாம்ராஜ், சித்திரை ராஜா, பாலமுருகன், முருகேசுவரி, மூகாம்பிகை ஆகியோர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் பயின்றோர் கழகம் சார்பில் நடத்தும் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை இந்த ஆண்டு இணையவழி வாயிலாக நடத்துவது, இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆண்டு விழா, செயற்குழு தேர்தல், மாணவர் போட்டிகள், ஓய்வுபெறும் ஆசிரியர் அலுவலர், டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொரோனா தொற்று தடைகாலம் நீங்கிய பின் நடத்துவது மற்றும் கொரோனா தொற்று தடுப்பூசி முகாமை நடத்திய பயின்றோர் கழக பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story