திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்தது


திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 21 Sep 2021 2:02 PM GMT (Updated: 21 Sep 2021 2:02 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு , காங்கிரஸ், ம.தி.மு.க., திராவிடர் கழகம், சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ரகுராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சாமிநாதன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மாயா, சக்திவேல், ஜாகிர் உசேன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் எழிலரசன், ம.தி.மு.க. வர்த்தக அணி பொறுப்பாளர் தீபம்மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல கட்டிமேடு ஊராட்சியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்டிமேடு ஊராட்சி தி.மு.க. கிளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம், பொருளாளர் தமிழ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொருக்கை ஊராட்சியில் கொருக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டகுழு உறுப்பினர்கள் கைலாசம், கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, பூசாந்திரம், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் பெரியார் படிப்பகம் மற்றும் புத்தக நிலையத்தில் கருப்புக்கொடி ஏந்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் ஜானகிராமன், தி.க. நிர்வாகிகள் சிவஞானம், கணேசன், சக்திவேல், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் பகுதியில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், நகரசெயலாளர் ராஜசேகரன், மாவட்ட மகளிரணி ராணிசேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேந்தி மத்திய அரை-சுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

நன்னிலத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் ஒன்றியத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வரத கோ.ஆனந்த் தனது வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதைப்போல தெற்கு ஒன்றிய செயலாளர் வே.மனோகரன் அவர் வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளர் பாலமுத்து, மாவட்ட பிரதிநிதி கணபதி ஆகியோர் தங்கள் வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story