தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளி மாணவர்கள் அவதி
வத்தலக்குண்டுவில் இருந்து நிலக்கோட்டை வழியாக விக்கிரமங்கலத்துக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது. மாணவர்களின் நலன்கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமீர்இப்ராகிம், நிலக்கோட்டை.
தெருவிளக்கு வசதி தேவை
நிலக்கோட்டை அன்னைநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். எனவே அன்னைநகரில் தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும்.
-ஜெகதீஷ்குமார், நிலக்கோட்டை.
ரேஷன்கடை திறக்கப்படுமா?
தேனி சுப்பன்தெருவில் புதிதாக ரேஷன்கடை கட்டிடம் கட்டி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை ரேஷன்கடை கட்டிடம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இந்த ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-பொன்முருகன், தேனி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல், சில இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-வீரப்பன், நல்லாம்பட்டி.
முழுநேர ரேஷன்கடை
வேடசந்தூர் தாலுகா இ.சித்தூர் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியில் பகுதிநேர ரேஷன்கடை உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ரேஷன்பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி பகுதிநேர ரேஷன்கடையை முழுநேர ரேஷன்கடையாக மாற்ற வேண்டும்.
-கந்தசாமி, நல்லமநாயக்கன்பட்டி.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி 5&வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-வித்யா, பச்சளநாயக்கன்பட்டி.
விரல்ரேகை பதிவில் கோளாறு
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ரேஷன்கடையில், எந்திரத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்வதில் தினமும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
குடியிருப்புக்கு அருகில் குப்பை குவியல்
வடமதுரை அருகே ஜி.குரும்பபட்டியில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சாரல் மழை பெய்தால் கூட அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு குப்பைகளை அகற்ற வேண்டும்.
-கருப்புசாமி, ஜி.குரும்பபட்டி.
சாக்கடை கால்வாய் அடைப்பு
பழனி பெரியப்பநகர் 9-வது தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துமால் மருகன், பழனி.
ஆக்கிரமிப்புகளால் அவதி
தேனி பழைய பஸ்நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-முருகன், தேனி.
Related Tags :
Next Story