திருவள்ளூர் அருகே முதியவருக்கு வெட்டு; 6 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே முதியவருக்கு வெட்டு; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Sept 2021 9:38 PM IST (Updated: 21 Sept 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே முதியவரை கத்தியால் வெட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமணம் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அபராஞ்சி (வயது 65). நேற்று முன்தினம் அபராஞ்சியின் பேரக்குழந்தைகள் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ், சகாதேவன், தீபா, ராசாத்தி ஆகியோர் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். இது குறித்து அறிந்ததும் அபராஞ்சி தட்டிக்கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 4 பேரும் அவரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் தலையில் வெட்டி உள்ளனர். பதிலுக்கு அபராஞ்சி மற்றும் அவரது உறவினரான பெருமாள் ஆகியோர் ராசாத்தி தரப்பினரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக சரண்ராஜ், சகாதேவன், தீபா, ராசாத்தி, பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story